மாதம்பட்டிக்கு இன்னொரு வாரிசு வந்தாச்சு!! ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவு..
மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் நடித்தவர். சினிமாவில் வெற்றியை காண முடியவில்லை என்றாலும் தனக்கு தெரிந்த சமையல் தொழிலை கையில் எடுத்து அதில் மிக விரைவிலேயே வெற்றியையும் கண்டவர்.
சமையல் தொழில் அதிக கவனம் செலுத்தியவர், எந்த ஒரு பிரபலத்தின் நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என எடுத்தாலும் அதில் இவரது சமையல் தான் அதிகம் இருந்தது.

ஜாய் கிரிஸில்டா
சமையல் தொழிலில் பிஸியாக இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மிகவும் பேமஸ் ஆனார். ஆனால் தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பேசும் பொருளாக உள்ளது.
தொடர்ந்து, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், மாதம்பட்டி குறித்து நடன அழகி சுனிதா பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தனக்கு மாதம்பட்டி ரங்கராஜ் மூலம் மகன் பிறந்துள்ளதாக ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.
 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        