மாதம்பட்டி அதற்கு தகுதி இல்லை.. பர்த் சர்டிபிகேட்டை வெளியிட்டு ஜாய் க்ரிசில்டா பரபரப்பு!
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இந்நிகழ்ச்சிக்கு முன் சில படங்கள் நடித்தாலும் பெரிய வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை.
சொந்த தொழில் மூலம் பெரிய அளவில் முன்னேறிய மாதம்பட்டி ரங்கராஜ் சொந்த வாழ்க்கை பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளை பெற்றார்.
ஆனால் விவாகரத்து பெறாமல் மாதம்பட்டி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை மறுமணம் செய்ய அவர் கர்ப்பமாகவும் இருந்தார்.

தற்போது ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
தகுதி இல்லை!
இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அப்பா பெயர் என மாதம்பட்டி ரங்கராஜ் பெயர் இடம்பெற்று இருக்கிறது. "நீங்க இதற்கு தகுதி இல்லை. இது வலியுடன் கொடுத்தது, பெருமை அல்ல" என ஜாய் கிரிஸில்டா கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.