ரூ. 500 கோடி சொத்துக்கு அதிபதி!! ஜூனியர் என் டி ஆர் அணியும் வாட்ச் இத்தனை கோடியா?
ஜூனியர் என் டி ஆர்
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ஜூனியர் என் டி ஆர். சமீபத்தில் அவர் நடிப்பில் பல கோடி வசூலித்த தேவரா படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
தற்போது பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடிக்க கமிட்டாகி ஷூட்டிங்கில் மும்பையில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு படத்திற்கு சம்பளமாக ரூ. 45 கோடி முதல் 60 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம். ஆர் ஆர் ஆர் படத்திற்காக 45 கோடி வாங்கிய ஜூனியர் என் டி ஆர், தேவரா படத்திற்காக 60 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
அப்படி சம்பாதித்து சுமார் ரூ. 500 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு வைத்திருக்கிறார். விலையுயர்ந்த கார், பைக், பங்களாவை வைத்திருக்கும் ஜூனியர் என் டி ஆர், பல கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
7 கோடி ரிச்சர்ட் மில்லே
அந்தவகையில், சமீபத்தில் அவர் கையில் உலகின் மிகவும் விலையுயர்ந்த வாட்ச் என கருதப்படும் ரிச்சர்ட் மில்லே வாட்சை அணிந்திருக்கிறார். ரிச்சர்ட் மில்லே ஆர் எம் 40-01 டர்பில்லோன் மெக்லரன் ஸ்பீட்டெய்ல் என்ற வாட்ச் மாடலைத்தான் ஜூனியர் என் டி ஆர் கட்டியிருக்கிறார். அந்த வாட்சின் மதிப்பு கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.