நாக்கு மறுத்துபோய் கொடுத்த CWC 6 ஜட்ஜ்..ஏமாத்திட்டாங்க!! பிரியா ராமன் கணவர் ரஞ்சித் பகீர் பேட்டி..
பிரியா ராமன் கணவர் ரஞ்சித்
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் சமையலை வைத்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் குக் வித் கோமாளி. சமீபத்தில், நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 6ன் டைட்டிலை ராஜு கைப்பற்றினார்.
நடந்து முடிந்த இந்த சீசனில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட விதம் ரசிகர்களையும் நடிகையின் கணவரையும் மிகவும் பாதித்திருக்கிறது. 90ஸ் களில் இருந்து டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியா ராமன் வெளியேற்றப்பட்ட விதம் பற்றி விமர்சித்து பேசியிருக்கிறார் அவரது கணவர் ரஞ்சித்.
நாக்கு மறுத்துபோய் கொடுத்த ஜட்ஜ்மெண்ட்
அதில், குக் வித் கோமாளியில் பிரியா ராமனுக்கு டைட்டில் தரலன்னு நிறைய பேர் வருத்தப்பட்டாங்க, ரெண்டு நடுவர்கள் இருக்கானுங்க, அவனுங்க நாக்குக்கு அடிங்கி மறுத்து போயிடுச்சி.
அவன் தொட்டுப்பார்க்குறது நல்லா இல்லைன்னு சொன்னா, அதுக்கு நாம பொறுப்பாக முடியாது. அவன் 40 பேர் சமைச்சதை சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்குன்னு சொல்றவன், நாக்கு பற்றி நமக்குத்தெரியாதா?.
அதனால நீ அதைப்பற்றி எல்லாம் பார்க்காதே பிரியான்னு நான் அவங்க கிட்ட சொன்னேன் என்று ரஞ்சித் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். பிரியா ராமன் ஆரம்பத்தில் இருந்து பல வரும் செஃப் ஆஃப் தி ஈக் அவார்ட் வாங்குனாங்க.
ஆனாலும் கடைசி நேரத்தில் அவர் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.