விஜய் தேவரகொண்டா விபத்தில் சிக்கியதுக்கு ரஷ்மிகா மீது பழி போடும் ரசிகர்கள்...
விஜய் தேவரகொண்டாவுக்கு விபத்து
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத் திரும்பி சென்று கொண்டிருக்கும் போது அவரின் லெக்சஸ் கார் விபத்தில் சிக்கியது.
விஜய் வந்த பாதையில் இரவு 3 மணியளவில் மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று திடீரென வலப்பக்கம் திரும்பியபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது காரில் இருந்த விஜய் தேவரகொண்டா மற்றும் அவருடன் இருவர் பயணித்திருக்கிறார்கள்.
நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ரகசியமாக நிச்சயதாத்தத்தை விஜய் முடித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
ராஷ்மிகா மீது பழி
இந்நிலையில், ராஷ்மிகாவின் ராசி பற்றி தேவையில்லாத பேச்சுக்கள் கிளம்பியிருக்கிறது. இருவரும் 2026 பிப்ரவரி மாதம் திருமணம் செய்யவுள்ளதால் நிச்சயம் முடித்த கையோடு குடும்பத்துடன் புட்டபர்த்தி சாய் பாபா ஆசிரமத்திற்கு விஜய் தேவரகொண்டா சென்றிருக்கிறார். அங்கிருந்து கிளம்பி வந்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது.
இதைவைத்து ராஷ்மிகாவை நிச்சயம் செய்த சில தினங்களில் இப்படியாகிவிட்டதே என்றும் ராஷ்மிகாவின் ராசிதான் காரணமா என்று மோசமாக நெட்டிசன்கள் பழிபோட்டு வருவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. மேலும், ஆல் இஸ் வெல், நான் நலமாக இருக்கின்றேன்.
கார் சேதமடைந்துள்ளது, ஆனால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கின்றோம். வீட்டிற்கு சென்றதும் வொர்க் அவுட் செய்தேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும் எனது நன்றிகள். இந்த செய்தியைக் கேட்டு யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று விஜய் தேவரகொண்டா சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
