ரஜினி, விஜய் எல்லாம் நோ.. பல கோடிகளில் சொத்து உள்ள தென்னிந்திய ஜோடிகள் லிஸ்ட்!
சினிமா நட்சத்திரங்கள் பல கோடியில் சொத்துக்கள் வைத்திருப்பது வழக்கமான ஒன்று தான். இந்நிலையில், சினிமாவில் பணக்கார ஜோடிகளாக வலம் வருபவர்கள் யார் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ராம் சரண் - உபாசனா காமினேனி:
முதல் பணக்கார ஜோடிகளாக வலம் வரும் ராம் சரண் - உபாசனா காமினேனி ஜோடி பல கோடியில் சொத்து வைத்திருக்கின்றனர்.
ஒரு பக்கம் தென்னிந்தியாவின் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார் ராம் சரண். மறு பக்கம், அப்பல்லோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை தலைவராக வலம் வருகிறார் உபாசனா.
நாகர்ஜுனா - அமலா:
நாகர்ஜுனா - அமலா சினிமா துறையில் மிகவும் பிரபலமான ஒரு ஜோடி. இந்த ஜோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 800 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அல்லு அர்ஜுன் - சினேகா:
இந்த ஜோடியின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ. 500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அஜித் குமார் - ஷாலினி:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அஜித். தற்போது கார் ரேசிலும் மாஸ் காட்டி வரும் அஜித் - ஷாலினி ஜோடிக்கு ரூ. 450 முதல் ரூ. 500 வரை சொத்து மதிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.