காசு வந்தா கழுத கூட கலரா ஆகிடும்! அசிங்கப்படுத்திய நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்..

sea beach julee waves
By Jon Jan 28, 2021 10:26 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் பேசப்பட்டு பிரபலமாகி அதன்பின் பிக்பாஸ் வாய்ப்பை பெற்றார். இதை பயன்படுத்திக்கொள்ளாமல் சில செய்கையால் பெயரை கெடுத்துக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு சென்றாலும் அவரை கிண்டல் செய்தும் புறக்கணித்தும் வருகிறார்கள். இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இணையத்தில் போட்டோஹுட் வெளியிட்டு வருகிறார். பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகைகளுக்க சமமாக தற்போதெல்லாம் படுபயங்கர கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார் ஜூலி.

சமீபத்தில் கடற்கரையில் படுத்தபடி படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட ஜூலியை நெட்டிசன் ஒருவர், ‘காசு வந்தா, காக்கா கழுதைலாம் கலர் ஆகிடும் என்று அசிங்கப்படுத்தி பேசியுள்ளார். இதற்கு ஜூலி அவரின் இன்ஸ்டாகிராமில், எந்த ஊர்ல காக்கா காசு சம்பாரிச்சு கலர் ஆச்சி போய் வேலையை பாரு என்று பதிலடி கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பல ரசிகர்கள் ஆதரவாக பேசி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Gallery