போகுற இடமெல்லாம் அவமானம், அசிங்கம் தான்! மேடையில் புலம்பித்தள்ளும் பிக்பாஸ் நடிகை..
ஜல்லிகட்டு போராட்டத்தின் போது சென்னையில் மிகப்பெரியளவில் கவரப்பட்டவர் ஜூலி. வைரலாக பேசபப்ட்ட ஜூலி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
5 செகெண்ட் வீடியோவுக்காக முழு பெயரையும் கெடுத்துக் கொண்ட ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகம் காட்ட முடியாத அளவிற்கு ரசிகர்களால் மோசமான நடத்தப்பட்டார். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வந்தார்.
இதையடுத்து எப்படியாவது தன் திறமையை காட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசிவரை இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேறபை பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
அங்கு பேசிய ஜூலி, க் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. எனக்கு புல் நெகட்டிவ் சென்ஸ், இதைப்பற்றி நான் ஓப்பனாகவே சொல்வேன். இதேபோல் காலேஜ் நிகழ்ச்சியிலும் நான் அவமானப்பட்டு இருக்கிறேன்.
யாருக்கும் என்னை பிடிக்காது என மனவருத்தத்துடன் ஜூலி பேசியது அங்கிருந்தவர்களை உருக வைத்துள்ளது. இந்த வீடியோ அவரது சமுகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜூலி.
Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today! Thought of sharing this ! It is always a good vibe when you're standing infront of the futures of India ! My heartfull thanks to " Sacred Heart college of Arts and science"#julie pic.twitter.com/iqGbIQ0mXR
— Mariajuliana_official (@lianajohn28) May 29, 2022