கூப்பிட்டு அசிங்கப்படுத்திய விஜய் தொலைக்காட்சி.. அதுகூட தெரியாமல் விழுந்து விழுந்து சிரித்த பிக்பாஸ் ஜூலி

Bigg Boss Star Vijay Reshma Pasupuleti
By Edward Jul 29, 2022 03:30 PM GMT
Report

தமிழகத்தில் பீட்டாவுக்கு எதிராகவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கடந்த 2017 ஜனவரி 8 ஆம் தேதி முதல் - 23 ஆம் தேதி வரை சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்காக தமிழக மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் மக்கள் மத்தியில் பலர் கவனத்தை ஈர்த்ததில் ஒரு தமிழச்சி பெண்ணாக குரல் கொடுத்து கவரப்பட்டவர் மரிய ஜூலியானா. அவரது ஆவேசமான பேச்சால் வைரலான ஜூலி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அப்படியே கெடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சி பின் வெளியில் எங்கு சென்றாலும் எதிர்ப்பினை சந்தித்து வந்த ஜூலி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார். பிக்பாஸில் கெடுத்துக்கொண்ட ஜூலி பிக்பாஸ் அல்டிமேட் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது அதே தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜூலி, ரேஷ்மா, கேப்ரியல்லா கலந்து கொண்டனர். மூவரையும் கலாய்த்து தள்ளியுள்ளார் பிக்பாஸ் ராஜு. ஜூலியை சூனியகாரி புகைப்படத்தை வைத்து அசிங்கப்படுத்தி பேசியிருந்தார்.

கலாய்த்து கிண்டல் செய்வதை கூட தெரியாமல் விழுந்து விழுந்து சிரித்துள்ளார் ஜூலி. தன்னை இப்படி விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சியில் வரவழைக்கப்பட்டு அசிங்கப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல ஜூலிக்கு என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.