விஜய்யை கண்டபடி பேசிய ஜூலி!! பதிலடி கொடுத்த பெண்மணி..
ஜூலி
நடிகர் விஜய்யின் பரப்புரை பேச்சை கேட்டப்பின் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
ஜூலியின் வீட்டியோவின் கமெண்ட் செக்ஷன் மட்டுமில்லாமல் சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் விஜய் ரசிகர்களும் தவெக ஆதரவாளர்களும் ஜூலி மற்றும் அவரது குடும்பத்தினரை மோசமாக விமர்சித்ததால் காவல் நிலையத்தில் புகாரளித்தார் ஜூலி.

இதனையடுத்து தஞ்சாவூர் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்ட சென்றபோது விக்னேஷ் என்ற மாணவர், விஜய் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றபோது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகினார்.
பதிலடி கொடுத்த பெண்
இதனை கண்டித்து ஜூலி ஒரு வீடியோவை பகிர்ந்து விஜய்யை கண்டபடி பேசினார். இதனை பொறுத்துக்கொள்ளாத விஜய்யின் ஆதரவாளர்கள் ஜூலியை கண்டபடி பேசி வருகிறார்கள். அதிலும் ஒரு பெண் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
விஜய்யை விமர்ச்சிக்கும் ஜூலி.. அடுக்கடுக்கான கேள்விகளை அள்ளிவீசிய இளம்பெண்.. #screentn#TVKVijay #thalapathyvijay #tvkwarriors #tvkvirtualwarriors #vijayfans #tvkfortn #TVKfor2026 #thalapathyfans #biggbossjulie pic.twitter.com/kZpaoEl5mC
— ScreenTN Media (@Screentnmedia) March 26, 2026