அம்பானி வீட்டு கல்யாணத்தில் பாட்டு பாட மட்டும் இத்தனை கோடிகள் சம்பளமா.. ஷப்பா

Marriage Anant Ambani
By Tony Jul 06, 2024 03:30 AM GMT
Report

இந்தியாவில் என்ன நடந்தாலும் தற்போது இது எல்லோரின் கவனமும் அம்பானி வீட்டு திருமணத்தில் தான். அம்பானியின் மகன் திருமணம் கடந்த 6 மாதங்களாக பல கட்ட நிகழ்ச்சிகளாக நடந்து வருகிறது.

அதிலும் பல வெளிநாட்டு பாப் சிங்கர்கள் கலந்துகொண்டு அசத்தி வந்தனர். ரிஹானா, கேட்டி பெர்ரி என பல நட்சத்திரங்கள் பெர்ப்பாமென்ஸ் செய்தனர்.

அம்பானி வீட்டு கல்யாணத்தில் பாட்டு பாட மட்டும் இத்தனை கோடிகள் சம்பளமா.. ஷப்பா | Justin Bieber Salary For Anant Ambani Marriage

இந்தியாவின் முக்கியமாக பாலிவுட்டின் அனைத்து சினிமா நட்சத்திரங்களும் எதோ குரூப் டான்ஸர்ஸ் போன் நடனமாடி மகிழ்வித்தனர். தற்போது திருமண விழாவில் பாப் சிங்கர் ஜெஸ்டின் பீபர் கலந்துக்கொண்டு பெர்ப்பாமென்ஸ் செய்துள்ளார்.

இதற்காக இவருக்கு ரூ. 83 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் பலரும் வாய் அடைத்து தான் உள்ளனர்.