திருமணத்திற்கு பின் பாலின பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளேன்.. ஜோதிகா என்ன இப்படி சொல்லிட்டாரு
சூர்யா - ஜோதிகா
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், மாயாவி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இருவரும் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்த நிலையில் 2007ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார்.
சமீப காலமாக சூர்யா மற்றும் ஜோதிகா விவாகரத்து பெற்று பிரியப்போவதாக தொடர்ந்து செய்திகள் உலா வந்த நிலையில், தற்போது ஜோதிகா பாலின பாகுபாடு குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜோதிகா அதிரடி
அதில், "நான் ஒரு முன்னணி நடிகரை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் நானும் பாலின பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளேன். அதுவும் திருமணத்திற்கு பின் தான் அதிகம் சந்தித்தேன்.
சூர்யாவை திருமணம் செய்து கொண்டது நான் செய்த அதிர்ஷ்டம் என்று கூறினால், எல்லோருமே சூர்யா மிகவும் நல்லவர் என்று கூறுகிறார்கள். அதுவே சூர்யா என்னை பற்றி கூறினால் மனைவி பற்றி யோசித்து கொண்டே இருக்கிறார் என்கிறார்கள்." என்று கூறியுள்ளார்.