ஜோதிகா கையில் காமசூத்ரா புத்தகம், எல்லை மீறும் Deep Fake
ஜோதிகா தமிழ் சினிமாவில் 2000 ஆண்டுகளில் கொடி கட்டி பறந்த நடிகை. இவர் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.
பிறகு 8 வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தில் அவர் நடித்தார், அந்த படம் ஜோதிகாவுக்கு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து ராட்சஸி, ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்தார்.
https://tamil.filmibeat.com/news/actress-jyotika-deepfake-fake-photos-shocks-fans-141299.html
இவர் தற்போது தன் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அங்கும் இவர் சைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் ஜோதிகா குறித்து ஒரு பெரும் சர்ச்சை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஜோதிமா காமசூத்ரா புத்தகத்துடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் வர, அது உண்மையில்லை டீப் பேக் என்று அழைக்கப்படும் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டது.
இதை பார்த்த ரசிகர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து, இதையெல்லாம் உருவாக்குபவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.