மும்பையில் சூர்யாவுடன் வீடுவாங்கி செட்டிலான ஜோ!! ஜோதிகா போட்ட பக்கா பிளான் இதுதான்
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா சிலகாலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதன்பின் 36 வயதினிலே, மகளிர் மட்டும் போன்ற படங்களில் நடித்து ரிஎண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகினார். அதன்பின் ஸ்ரீ என்ற படத்தில் பாலிவுட்டிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதன்பின் ஜோதிகா கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் பல கோடியில் வீடு ஒன்றினை வாங்கி செட்டிலாகிய விசயம் வைரலானது. எதற்கு ஜோதிகா கணவருடன் அங்கு செட்டிலாகினார் என்று பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாலிவுட்டில் 25 ஆண்டுகளுக்கு முன் டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் ஜோதிகா. அதனை தொடர்ந்து 25 ஆண்டுக்கு பின் ஸ்ரீ பட்த்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
தற்போது மற்றொரு இந்தி படம் ஒன்றில் நடிகை ஜோதிகா நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் இணைந்து நடிக்க, இயக்குனர் விகாஸ் பால் என்பவர் இயக்கவுள்ளாராம். இப்படத்தில் கமிட்டாகி அடுத்தடுத்த இந்தி படங்களில் நடிக்கவிருப்பதால் தான் நடிகை ஜோதிகா மும்பையில் வீடு வாங்கி செட்டிலாகியிருக்கிறாராம்.