மருமகளாக ஏற்க மறுத்த சிவக்குமார்!! பழிக்குபழி வாங்கிய நடிகை ஜோதிகா.. அடங்கி போன சூர்யா
நடிகர் சூர்யா தான் காதலித்து வந்த நடிகை ஜோதிகாவுக்காக குடும்பத்தினரிடம் கூறி திருமணத்திற்காக 4 வருடம் காத்திருந்தார். காதலுக்கு சம்மதம் கொடுக்காமல் அதன்பின் தான் அவரது அப்பா சிவக்குமார் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியொன்றில், ஜோதிகாவை சூர்யா காதலிக்கிறார் என்று தகவல் வெளியானதும் கண்டித்து வந்தார்.
ஜோதிகாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வைராக்யத்தில் இருந்ததாகவும் பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடன் பேட்டி எடுத்து ஜோதிகா - சூர்யா காதல் பிடிக்கவில்லையா என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அதன்பின் ஒரு வழியாக சிவக்குமார் ஒப்புக்கொள்ள விருப்பம் இல்லாமல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாராம்.
ஆனால் சிவக்குமார் திருமணத்திற்கு பின் நடிக்கக்கூடாது என்று கண்டீசன் ஜோதிகாவுக்கு போட்டுள்ளார். காதல் தான் முக்கியம் என்று தான் கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கிய படத்திற்கு அப்படியே அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுத்தாராம் ஜோதிகா. திருமணத்திற்கு தன்னிடம் கேள்வி எழுப்பிய அந்த பத்திரிக்கையாளரையும் அழைத்து, இப்போ உங்களுக்கு சந்தோஷமா, திருமணம் செய்துவிட்டேன் என்றும் கூறினாராம்.
இதன்பின் ஒருமேடையில் பெரிய பையன் நடிகையை திருமணம் செய்து கொண்டான், ஆனால் சின்ன பையன் நம்முடைய சாதியில் பார்த்து சினிமாவில் சம்மந்தம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்தேன் என்று கூறியிருந்தார் சிவக்குமார்.
இதை வைத்து தான் சிவக்குமாரை பழிவாங்க, ஜோதிகா மீண்டும் படங்களில் நடிப்பதோடு இல்லாமல் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.