தேசிய விருது வாங்கியதும் மும்பையில் செட்டிலாகிய ஜோதிகா.. சூர்யாவை வைத்து புது ரூட் போட்ட மனைவி
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா. வாளி படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா அதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து முன்னணி இடத்தினை பெற்றார்.

குடும்பம், குழந்தை
சூர்யாவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து வந்த ஜோதிகா, அவரை 4 வருடங்களாக காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்த ஜோதிகா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
குடும்பம், குழந்தை என்று பார்த்து வந்த ஜோதிகா கணவருடன் 2டி நிறுவனத்தின் தயாரிப்பையும் ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினை சூரரை போன்று படம் சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இசைக்கான விருதுகளை தட்டிச்சென்றது.

தேசிய விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. கணவருடன் இணைந்து டெல்லிக்கு சென்று விருதி வாங்கியுள்ளார். இந்நிலையில் விருது வாங்கியதும் சூர்யா சென்னை படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
ஜோதிகா மும்பையில்
ஆனால், நடிகை ஜோதிகா மும்பைக்கு சென்று செட்டிலாகியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சூரரை போன்று படத்தின் இந்தி ரீமேக் சென்று கொண்டிருப்பதால் அதனை 2டி நிறுவனம் தயாரித்தும் வருவதால் ஜோதிகா மும்பையில் செட்டிலாகி இருக்கிறாராம். மேலும் பாலிவுட் படங்களையும் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். ஜோதிகா சமீபத்தில் மும்பையில் பொது இடங்களுக்கு சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
