அப்பாவைவிட்டு சூர்யா பிரிந்துவிட்டாரா!! குழந்தைகளுடன் சேர்ந்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஜோதிகா

Sivakumar Suriya Jyothika
By Edward Apr 01, 2023 07:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறி சிறப்பாக வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள் சூர்யா - ஜோதிகா. 4 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும், ஆண் மற்றும் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி பிள்ளைகளை வளர்க்கும் வேலையை பார்த்து வந்தார் ஜோதிகா.

தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள ஜோதிகா, பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதைகளில் நடித்தும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்தி படத்தில் கமிட்டாகிய ஜோதிகா, மும்பையில் பிள்ளைகளுடன் செட்டிலாகிவிட்டார் என்று பல கோடி மதிப்பில் வீடு இதற்காக சூர்யா வாங்கியதாகவும் கூறப்பட்டது.

அதேபோல் விஜய் எப்படி அவரது அப்பவை கைவிட்டுவிட்டாரோ அதேபோல் சூர்யா, மனைவியுடன் சேர்ந்து மும்பையில் செட்டிலாகி அப்பாவை கைவிட்டுவிட்டார் என்ற செய்திகள் பரவியது.

மும்பையில் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில், ஜோதிகா, கணவர் சூர்யா, மாமனார் சிவக்குமர் மற்றும் இரு பிள்ளைகளுடன் சேர்ந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இப்படியான வதந்தி செய்திகளுக்கு ஜோதிகா மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மலையாளம் மற்றும் இந்தி படங்களில் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தான் நடித்து வருகிறார் ஜோதிகா என்றும் கூறப்படுகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery