கணவரையே பொது இடத்தில் சைட் அடிக்கும் நடிகை ஜோதிகா.. வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் முன்னணி காதல் ஜோடிகளாகவும் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக சிறப்பாக வாழ்ந்து வருபவர்கள் தான் சூர்யா - ஜோதிகா. பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தப்பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பல எதிர்ப்புகளை மீறி குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து மகள் மற்றும் மகனை பெற்றெடுத்து வளர்ந்து வருகிறார். திருமணமாகியப்பின் சில காலம் சினிமாவில் இருந்து விலகி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள ஜோதிகா, கணவர் சூர்யாவுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
கணவர் படத்தில் ஷூட்டிங்கிற்காக குடும்பத்துடன் அங்கு தங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் சமீபத்தில் கணவருடன் சேர்ந்து ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது பேட்டியளித்த சூர்யாவை அப்படி வெச்சக்கண் பார்க்காமல் ரொமாண்டிக் லுக் விட்டு சைட்டடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.