நயன்தாராவை பார்த்து ஜோதிகாவை அசிங்கப்படுத்திய சூப்பர் ஸ்டார்!! நடிகைன்னு நிரூபித்த ஜோ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தார் நடிகை ஜோதிகா. தற்போது திருமணத்திற்கு பின் நடிக்க ஆரம்பித்து பாலிவுட் வரை சென்றிருக்கிறார். சமீபத்தில் கூட பாலிவுட் படத்திற்காக விஜய்யின் 68வது படத்தை நிராகரித்திருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் பி வாசு சமீபத்தில் நயன் தாரா நடிப்பை பார்த்து வியந்து ஜோதிகாவை அவரை போல் நடிக்க வையுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
என்னதான் சீனியர் நடிகையாக இருந்தாலும் தன்னுடைய இரண்டாவது படத்தில் நயன் தாரா, ஒரு காட்சியில் ரஜினியை வியக்கவைக்கும் நடிப்பை காட்டி மிரள வைத்திருந்தாராம்.
இதனால் தான் ஜோதிகாவையும் அப்படி நடிக்க வையுங்கள் என்று கூறியிருந்தாராம் ரஜினி. அதனால் தான் தற்போது நயன் தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
ஆனால், ஜோதிகா
சந்திரமுகியாக தன்னை மிரட்டி விட்டார்
என்று ரஜினிகாந்தே மேடையில்
கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.