ரெண்டு மூணு சீனுக்கு கூப்பிடுறது கேவலமானது!! இயக்குனர் குறித்து நடிகை ஜோதிகா ஓப்பன் டாக்...
வட இந்திய பெண்ணாக தமிழ் சினிமா பக்கம் வந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தில் ஷோனா ரோலில் நடித்து சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் விஜய், அஜித், கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்தார்.
நடிகர் சூர்யாவுடன் நடித்து அவரை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா சினிமாவில் இருந்து விலகி தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து மலையாளம் மொழியில் நடிகர் மம்மூட்டியுடன் ஜோடி சேர்ந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், காதல் தி கோர் படத்தின் கதையை கேட்டதும் என் குழந்தைகள் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள். நான் 25 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கிறேன். ஆனால் ஒரு விசயம் எனக்கு பிடிக்கவில்லை.
பெரிய படங்கள் நிறைய வருகிறது. ஆனால் அதில் கதாபாத்திரம் இல்லை, எதற்கு என்னிடம் வந்து கேட்கிறீர்கள் என்று வெளிப்படையாக கேட்டு விடுவேன். 25 ஆண்டுகளாக இருக்கும் என்னிடம் இரண்டு சீன் கொடுங்கள் என்று கேட்பது எவ்வளவு பெரிய கேவலமான ஒரு கேள்வி. பல இயக்குனர்கள் பெரிய படங்களில் கேட்கும் போது நான் கேட்டு இருக்கிறேன்.
10 மணிக்கு அதை செய்ய சொல்லி டார்ச்சர்!! விவாகரத்து செய்திருப்பேன்.. மகாலட்சுமியால் புலம்பும் கணவர் ரவீந்தர்..
இரண்டு, மூன்று நல்ல சீன்கள் இருந்தால் நான் கண்டிப்பாக பண்ணுவேன். மகிழ்ச்சி தான், நீங்கள் என்னை மதித்து சம்பளம் கொடுத்து நடிக்க கூப்பிடுகிறீர்கள். இது இளம் பெண்களுக்கு பிடிக்கும், நான் சும்மா நின்றுவிட்டு நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை.
அதே மலையாள சினிமாவில் மம்மூட்டி சாருக்கு இணையான கதாபாத்திரம் எனக்கு கொடுத்து இருக்கிறார்கள். என் ரோல் எனக்கு சமமாக இருந்தது. அதனால் தான் இயக்குனரையும், நடிகரையும் கதையையும் நான் மதிக்கிறேன்.