சாராயக்கடையில் வேலை பார்த்த நடிகர் செந்தில்! சாலிகிராமத்தில் அவருக்கு சொந்த வீடே இத்தனையாம்?

comedian senthil goundamani kbhagyaraj tamilactor செந்தில்
By Edward Mar 23, 2022 02:15 PM GMT
Report

தமிழ் சினிமாவின் காமெடிக்கு பேர் போன லிஜெண்ட் ஆக்டர்கள் என்றால் அது கவுண்டமணி - செந்தில் தான். ஆரம்பகாலத்தில் தன்னுடைய கவுண்டர் காமெடியாலும் இருவரின் காமினேஷனில் வரும் படங்களுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்.

அப்படி கவுண்டமணியால் சினிமாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய நடிகராக மாறியவர் செந்தில். செந்தில் சினிமாவிற்கு வரும் முன்பே சாராயக்கடையில் பணியாற்றி இருந்தார்.

வாய்ப்பிற்காக பலரிடன் கேட்டும் அதன்பின் தான் மலையாள படம் ஒன்றில் அறிமுகமாகினார். பின் மெளன கீதங்கள் படத்தில் தமிழில் அறிமுகமாகி அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் செந்தில்.

அவர் குறித்த சில விஷயங்களை இயக்குனர் பாக்யராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். தூரல் நின்னு போச்சு படத்தில் செந்தில் நடித்திருந்தார். நம்பியாருடன் நானெல்லாம் நடிப்பேனா என்று செந்தில் ஆச்சரியமாக பேசினார்.

அப்போது அவரை சிலர் கருமா என்று கூப்பிடுவார்கள். ஒரு உரிமையுடன் தான் அனைவரும் அப்படி கூப்பிட்டு வந்தனர். சாலிகிராமத்தில் செந்தில் வீடு தேடி சென்றிருந்தேன்.

அப்போது வீடு எனக்கு தெரியாததால் ஒருவரிடம் கேட்டபோது இங்கு இருக்கும் வீடுகள் எல்லாம் செந்தில் வீடுகள் தான் என்று கூறியதும் நான் காமெடியாக சிரித்தேன். சாலிகிராமத்தில் நிறைய வீடுகள் செந்தில் சொத்து தான். இப்படி மாறுவது அவர்களின் உழைப்பு கிடைத்ததுதான் என்று கூறியுள்ளார்.