தனுஷ் - ஐஸ்வர்யா சேருவது ரொம்ப கஷ்டமா? பிரபல தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் தற்போது மாறன் படத்தின் படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தனுஷ் சமீபத்தில் அவரது வாழ்க்கையில் எடுத்த பெரிய முடிவுதான் பேசு பொருளாக மாறியுள்ளது.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த தனுஷ், 18 வருட வாழ்க்கையில் இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளனர். இந்த செய்தியால் ரசிகர்களும் இரு வீட்டாரில் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
அவர்களுக்குள் என்ன தான் பிரச்சனை என்று சமாதானம் செய்தும் தனுஷ் மாறாவே இல்லையாம். பல பிரபலங்கள் ஆறுதலாக பேசி வரும் நிலையில், தயாரிப்பாளர் கே. ராஜன் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கருத்து ஒன்றினை கூறியுள்ளாராம்.
இருவருக்கும் மனசு ஒற்றுப்போவது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால் மகன்களுக்காக ஒன்று சேர்வார்கள் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.