நடிகர் அஜித்தை படுகேவலமாக திட்டிய பிரபல தயாரிப்பாளர்.. வீடியோவை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Ajith Kumar Gossip Today Boney Kapoor H. Vinoth
By Edward Dec 11, 2022 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் துணிவு படத்தில் நடித்துள்ளார். வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக களமிரங்கவுள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் முதல் பாடல் நேற்று முன் தினம் 9 ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. சில்லா சில்லா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிற்து. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அஜித்தை பற்றி படுகேவலமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் வட இந்திய தயாரிப்பாளருக்கு அஜித் வாய்ப்புகள் அடுத்தடுத்து கொடுப்பதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கே ராஜன், அவரு கொஞ்சம் கூட நடந்து வந்து மக்களை சந்தித்தால் அவரை பார்த்து சொல்லலாம்.

பாத்ரூமில் இருந்து வந்து அப்படியே காரில் ஏறி ஷூட்டிங் போரார். எந்த உலகத்தை பற்றியும் கவலைப்படாமல் சொந்த ரசிகர்கள் காசில் வாழ்ந்து வரும் எந்த நடிகரையும் நான் மதிப்பதில்லை என்று கூறியுள்ளார். இதற்கு அஜித் ரசிகர்கள் கே ராஜன் அவர்களை மோசமாக இணையத்தில் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.