பெரிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை உறிஞ்சுகிறார்கள்? பிகில் பட உண்மையான நிலை இதான்?

boxoffice bigil valimai bluesattaimaran krajan
By Edward Mar 09, 2022 08:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பெரிய படங்களின் வசூல் அதிகரித்தாலும் அதன் பாக்ஸ் ஆபிஸிற்காக படத்தின் தயாரிப்பாளர்கள் நஷ்டமானாலும் பெரிய வசூல் என்று தான் கூறிக்கொள்கிறார்கள்.

அந்த நடிகரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்ற நோக்கம் தான் அதற்கு காரணம் என பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர் கே ராஜன் விஜய் பற்றியும் பிகில் படத்தை பற்றியும் மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

அப்பா அம்மாவை மதிக்காதவர்கள் யாரும் நல்லா இருக்க முடியாது. அது பெரிய நடிகராக இருந்தாலும் அப்பா அம்மாவை கோர்ட் வரைக்கும் இழுத்துக்கொண்டு போகாதீர்கள். பொண்டாட்டி வந்ததும் அப்பா அம்மாவை ஒதுக்காதீர்கள் என்று பேசியுள்ளார். மேலும், ஷாருக்கானின் இந்தி படம் ஒன்றினை பார்த்தேன்.

அதை தழுவிய ஒரு கதையை பெரிய நடிகர் ஒருவர் நடித்து சில வருடங்களுக்கு முன் வெளியானது. தயாரிப்பாளருக்கு 300 கோடி போட்டு 30 கோடி நஷ்டத்தை சந்தித்தார். இதுக்கு பல செலவுகள், கமிஷன் வேற என்று கூறியதோடு சவால் விட்டு பேசியுள்ளார் கே ராஜன்.

பெரிய ஹீரோக்கள் வாங்கும் 100 கோடியை எங்கே பதுக்கி வைக்கிறீர்கள் என்றும் கேள்வி கேட்டுள்ளார். இதை ப்ளூ சட்டை மாறன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பிகில் படத்தினை கலாய்த்துள்ளார்.

சமீபகாலமாக வலிமை மற்றும் அதில் நடித்த அஜித்தை பற்றி படுகேவளமாக விமர்சனம் செய்து வந்தார். இதைதொடர்ந்து பிகில் விஜய் படத்தையும் தற்போது கேலி செய்யும் விதமாக விமர்சனம் செய்துள்ளார்.