திருமணத்திற்கு பின்பும் அப்படி இப்படி இருந்த ரஜினிகாந்த்!! விவாகரத்து வரை சென்ற மனைவி லதா..
சினிமாவை பொறுத்து வரை நட்சத்திரங்கள் நல்ல பெயரை எடுத்தாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிவதுண்டு. அப்படி சமிபகாலமாக சினிமா நட்சத்திரங்களின் பார்ட்டி விவகாரம், விவாகரத்து விஷயம் சம்பந்தமான செய்திகள் அதிகரித்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. சமீபத்தில் பாடகி சுசித்ரா நடிகர் நடிகைகள் பார்ட்டி கொண்டாடுவது பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை அடுத்து பிரபல தயாரிப்பாளர் கே ராஜன், ரஜினிகாந்த் குறித்து ஒரு தகவலை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆரம்பகாலத்தில் இருந்தே, பார்ட்டி கலாச்சாரமாகட்டும் விவாகரத்தாக இருக்கட்டும், நடிகைகளுடன் காதலில் இருப்பதாகட்டும் இது ஆரம்பத்தில், ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகுவதற்கு முன்பே சினிமாவில் இந்த பேச்சுக்கள் இருக்கு தானே என்று தொகுப்பாளர் கே ராஜனிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர், ரஜினி சார், அப்படி இப்படி இருந்தார், அதையெல்லாம் அவரே சொல்லுவார். ஆனால், கல்யாணத்துக்கு பின்பு கூட அது காதல் தான். அவர்களுக்கு கருத்து வேறுபாடு வந்தது.
ரஜினிக்கும் அவரது மனைவி லதாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் அளவிற்கு சென்றது. அதன்பின் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து சேர்த்து வைத்து திருப்பதி சென்று மறுபடியும் மறுவாழ்வு துவங்கி நன்றாக இருக்கிறார்கள் என்று கே ராஜன் கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..