சைந்தவி நல்ல பொண்ணு!! ஜிவி பிரகாஷ் விவகாரத்தில் கைகூப்பி கெஞ்சிய பிரபல தயாரிப்பாளர்..
சினிமா நட்சத்திரங்களின் திருமணங்கள் எப்படி அதிகரித்து வருகிறதோ, அதேபோல் விவாகரத்து சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக நட்சத்திரங்களின் விவாகரத்து அடுத்தடுத்து நடந்து வருவது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமலா பால், சமந்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து விஷயம் பெரியளவில் பேசபட்டது.
சமீபத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் நாடிய சில வாரத்தில் ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி தம்பதியினர் பிரியவுள்ளதாக கூறிய செய்தி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இருவரும் பிரியப்போவதாக அறிக்கை மூலம் செய்தியை வெளியிட்ட நிலையில் இதுபற்றி பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு படத்தின் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
போன மாசம் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்காக கோர்ட்டுக்கு போன விஷயத்தால் பரபரப்பாகி தமிழ் மக்கள் வேதனைப்பட்டனர். இதற்கு தான் படம் எடுக்கிறோமா?, இரு குழந்தை விட்டுவிட்டு நாங்கள் பிரிந்து செல்கிறோம் என்று போவதால் அந்த குழந்தையின் கதி என்ன?. அந்த குடும்பத்தின் மாபெரும் தலைவனுடைய மனசு எப்படி வேதனைப்பட்டு இருக்கும்.
என் வேதனை, அவர் ரசிகர்கள் இதை ஃபாலோ பண்ணிடக்கூடாது, என்பது தான் வேதனை. இப்போ புதுசா பார்த்தா ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி. அந்த பொண்ணு நல்ல பொண்ணு, முதல் பாட்டு என் உணர்ச்சிகள் படத்தில் பாடிச்சு, காதல் பண்ணி நல்லா புரிந்து கொண்டு தான் கல்யாணம் பண்ணிச்சு. அதன்பின் ஏன் கசப்பு வந்துச்சு. விட்டுக்கொடுத்து வாழ்ந்தவன் கெட்டுப்போவதில்லை.
சாஃப்ட்வேர் கம்பெனியில் நிறைய, 15 நாள் காதல், ஒரு மாச வாழ்க்கை மூணாவது மாசம் விவாகரத்துன்னு கோர்ட் ஃபுல்லா இருக்கு, இந்த பண்பாடு சினிமாக்காரர்களுக்கு நடக்கக்கூடாது என்ற வேதனையில் தான் சொல்கிறேன். கைக்கூப்பி வணங்குகிறேன், கணவன் - மனைவியாக தொடர்ந்து வாழுங்கள், இன்ப வாழ்க்கை வாழுங்கள், நல்ல குழந்தைகளை பெற்றெடுத்து இந்த நாட்டுக்கு தந்து செழிப்போடு வாழுங்கள் என்று கே ராஜன் தெரிவித்துள்ளார்.