முதல் படத்தில் நடித்தப்பின் பெயரை மாற்றிய நடிகைகள்!! ஜெயிலர் பட நடிகை பெயர் இதுவா?

Amala Divya Spandana Sunaina Tamil Actress Mirnaa
By Edward Mar 28, 2026 12:45 PM GMT
Report

திரைத்திரையில் அறிமுகமானதற்கு பின் சினிமா கலைஞர்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக தங்க:ளின் பெயர்களை மாற்றிக் கொள்வார்கள். அப்படி முதல் படத்தில் நடித்தப்பின் ராசி அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக தங்கள் பெயரை மாற்றிக்கொண்ட நடிகைகள் பட்டியலை பார்ப்போம்.

முதல் படத்தில் நடித்தப்பின் பெயரை மாற்றிய நடிகைகள்!! ஜெயிலர் பட நடிகை பெயர் இதுவா? | K Wood Actresses Changed Their Names After Debut

பெயரை மாற்றிய நடிகைகள்

மலையாளத்தில் இருந்து தமிழில் வந்து நடித்து பிரபலமான நடிகை அமலா பால், சிந்து சமவெளி பட இயக்குநர் சாமி அவருக்கு அனகா என்று பெயர் சூட்டினார். அப்படத்தின் தோல்வியால் அதிர்ஷ்டம் இல்லை என்று அமலா பால் என்றே மாற்றிக்கொண்டார்.

முதல் படத்தில் நடித்தப்பின் பெயரை மாற்றிய நடிகைகள்!! ஜெயிலர் பட நடிகை பெயர் இதுவா? | K Wood Actresses Changed Their Names After Debut

யோகி பாபுவுடன் காக்டெய்ல் படத்தில் நடித்த ரஷ்மி கோபிநாத், நிவிக்ஷா என்ற பெயரை மாற்றிக்கொண்டார். தன் பெயரை பலரும் சரியாக உச்சரிக்காததே பெயரை மாற்ற காரணமாம்.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை சுனைனா, 2013ல் ஜோதிடத்தின் அறிவுரைபடி தன் பெயரை அனுஷா என்று மாற்றினார். ஆனால் அந்த பெயரால் பெரிய மாற்றம் ஏற்படாததால் சுனைனா பெயருக்கே திரும்பினார்.

முதல் படத்தில் நடித்தப்பின் பெயரை மாற்றிய நடிகைகள்!! ஜெயிலர் பட நடிகை பெயர் இதுவா? | K Wood Actresses Changed Their Names After Debut

கன்னடத்தில் திவ்யா என்றும் தெலுங்கில் ஸ்பந்தனா என்றும் அறிமுகமாகினார். தமிழில் குத்து படத்தில் நடித்தபோது திவ்யா என்று அழைக்கப்பட்டவர், பொல்லாதவன் படத்தில் திவ்யா ஸ்பந்தனா என்றும் வாரணம் ஆயிரம் படத்தின்போது வெறும் திவ்யா என்றும் பலமுறை பெயரை மாற்றிக்கொண்டார்.

வட்டாரம் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை அதிசயா, பேராண்மை படத்திற்கு பின் சொந்தப்பெயரான வசுந்தாரா என்பதை வைத்துக்கொண்டு வசுந்தரா காஷ்யப் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

முதல் படத்தில் நடித்தப்பின் பெயரை மாற்றிய நடிகைகள்!! ஜெயிலர் பட நடிகை பெயர் இதுவா? | K Wood Actresses Changed Their Names After Debut

அதிதி மேனன் என்ற பெயரில் அறிமுகமான நடிகை தற்போது மிர்ணா என்ற பெயரில் நடித்து வருகிறார் ஜெயிலர் பட நடிகை.