கவர்ச்சி ஆடைக்கு தகுந்த மாதிரி தான் சம்பளம்.. கமல் பட நடிகை உருக்கம்
Tamil Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காஜல் பசுபதி.
இவர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 2004 -ம் ஆண்டு வெளியான "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்" படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இதன் பின்னர் பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

உருக்கமான பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல் பசுபதி சினிமாவில் நடக்கும் மோசமான சம்பவங்களை குறித்து பேசியுள்ளார், அதில் " திரைப்படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடுபவர்கள், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு தகுந்த மாதிரி தான் சம்பளம் கொடுப்பார்கள். மிக கவர்ச்சியான ஆடையில் நடித்தால் சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.
