போன் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டான்!! உண்மையை உடைத்த நடிகை காஜல்

Bigg Boss Tamil Actress Actress
By Edward Jul 18, 2024 12:30 PM GMT
Report

நாயகி என்பதை தாண்டி பிக்பாஸ் பிரபலம் என்று கூறினால் இவரை மக்களுக்கு நன்றாக தெரிந்துவிடும். அண்மையில் காஜல் பசுபதி சாண்டியை விவாகரத்து செய்ததற்கு பின் ஏற்பட்ட காதல் குறித்தும், தனது வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார். அதிக பொசஸ்சிவ் காரணமாக நான் நிறைய பேரை இழந்தேன், சாண்டியை கூட அதனால் தான் பிரிந்தேன். எனவே நான் காதலிப்பவர் மீது பெசஸீவாக இருக்க கூடாது என்று ஒருவரை காதலித்து அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன், நானும் அப்படி தான் இருப்பேன் என்றேன்.

போன் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டான்!! உண்மையை உடைத்த நடிகை காஜல் | Kaajal Pasupathi Talks About Adjustment Issue

ஆனால் அவர் எனது பிறந்தநாள் அன்று மற்றவர்களை காதலித்தது போல் என்னை ஏன் காதலிக்கவில்லை என்று விடிய விடிய அடித்தான். மறுநாள் காலையில் நான் அவனை அடித்தேன் என்று எல்லோரிடமும் கூறினான். அக்கறையாக இருந்தாலும் தவறு, இல்லை என்று தவறு என்கிறார்கள் என தனது வாழ்க்கை குறித்து சிரித்தபடி கூறியுள்ளார்.

மேலும், அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு கூப்பிடுபவர்கள், அந்த பெண் சிங்கிளாக இல்லை, ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். அவர்கள் எப்போதும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றித்தன் பேசுவார்கள். நாமாக சென்று வாய்ப்பு கேட்டால் அப்படித்தான் நடக்கும். அவர்களாகவே தொடர்பு கொண்டு வாய்ப்பு பற்றி பேசும் போது இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை கம்மியாகத்தான் செய்யும்.

நெப்போலியனின் மகனால் இல்லற வாழ்க்கை நடத்த முடியாது.. பகிர் கிளப்பும் பிரபலம்!!

நெப்போலியனின் மகனால் இல்லற வாழ்க்கை நடத்த முடியாது.. பகிர் கிளப்பும் பிரபலம்!!

சன் மியூசிக்கில் வேலை செய்த போது எனக்கு ஒரு ஃபோன் வந்தது. நீ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். அதை செய்ய வேற ஆள் இருக்கிறார்கள், அவர்களை வெச்சுக்கோங்க என்ரு உடனே நான் சொல்லிவிட்டேன். இது போல் என்னிடம் கேட்டு வரும் போது க்ளீன் ப்ராஜெக்ட் ஆக இருந்தாலும் சொல்லுங்கள், பேமெண்ட் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம், மற்ற விஷயங்களுக்கு நோ என்று தெளிவாக கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

போன் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டான்!! உண்மையை உடைத்த நடிகை காஜல் | Kaajal Pasupathi Talks About Adjustment Issue

வாய்ப்பு கேட்டு நாமாக சென்றால் இயக்குனரிடம் நேரடியாக பேசப்போறது கிடையாது. அவர் மேனேஜர் ஒருவர் இருப்பார், அவர்தான் இதை முதல் ஆரம்பித்து நீங்க நேரில் வாங்க பார்க்கலாம் என்று கூறினால், அவர் கண்டிப்பாக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய தான் சொல்வார். நேரில் பார்த்தால் தான் ப்ராஜெக்ட் தருவேன் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை காஜல் பசுபதி.