பொறாமையின் உச்சத்துக்கே சென்ற நடிகை! சீரியலில் நடிச்சிருந்தா வாய்ப்பு கிடைச்சிருக்கும்?
கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது விக்ரம் படம். கமலுடன் விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தும் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர்.
மேலும் விஜய் சேதுபதியின் பொண்டாட்டிகளாக நடிகை ஷிவானி, விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி போன்ற சிரீயல் நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதனை பார்த்த நடிகையும் நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் நாங்களும் சின்னத்திரை சிரீயலே பண்ணி இருக்கலாம்.
விஜய் டிவி சீரியல் நடிகைகள் மூவரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பொறாமையில் பொங்காதீங்க நீங்களும் சில படங்களில் நடித்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார். அதற்கு காஜல், அவர்கள் சீரியல் நடிகைகள் பெரிய படத்தில் நடித்துள்ளார்களே என்று பதிலளித்திருக்கிறார்.