தன் பால் ஈர்ப்பு வைத்திருக்கும் கணவர்!! விவாகரத்து கேட்ட ஜோதிகா..
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து அஜித்தின் வாலி படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை ஜோதிகா. இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி வந்த ஜோதிகா சில வருடங்களுக்கு முன் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களை தாண்டி மலையாளம், இந்தி மொழிகளில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்துள்ள காதல் தி கோர் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த 23 ஆம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்று 2 நாளில் 2.30 கோடி வசூலை பெற்றும் வருகிறது.
இப்படத்தில் தன் பால் ஈர்ப்பு வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்யும் மனைவி ரோலில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இதனால் கணவருக்கு மனைவிக்கும் என்ன நடக்கிறது என்பதை தான் கதையாம்.
இதனை பார்த்து பலர் வியந்து போய், இதுவரை இல்லாத ஒரு கதை என்றும் எப்படி இப்படியெல்லாம் யோசித்து படம் எடுக்கிறார்கள் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.