டில்லி கார்த்தி மகள் மோனிகாவா இது!! இப்படி வளர்ந்து ஆளாகிட்டாங்க.. புகைப்படம்..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சினிமா யூனிவர்சில் நடிக்க பல நட்சத்திரங்கள் போட்டிப்போட்டு வருகிறார்கள். அப்படி லோகேஷின் சினிமா யூனிவர்ஸ் ஆரம்பிக்கப்பட்ட படம் கைதி. அப்படத்தில் டில்லி கார்த்தி-க்கின் மகளாக அமுதா ரோலில் நடித்து பிரபலமானவர் குட்டி நட்சத்திரம் மோனிகா சிவா.
பல படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமான மோனிகா விக்ரம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியிலும் நடித்திருந்தார்.
கைதி படத்தில் குட்டியாக இருந்தவர் விக்ரம் படத்தில் சற்று வளர்ந்து காணப்பட்டார். விக்ரம் படம் வெளியாகி 2 ஆண்டுகளாகியப் பின் கைது 2-விலும் மோனிகா நடிக்கவுள்ளார்.
தற்போது மோனிகா வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியிருக்கிறார். மாடர்ன் ஆடையில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகிலும் இருக்கிறார்.
அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நம்ம டில்லி பொண்ணா இது என்று வாய்ப்பிளந்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே சமயம் லோகேஷ், மோனிகா வளர்ந்துள்ளதை எப்படி கைதி 2வில் காண்பிப்பார் என்ற சந்தேகமும் எழ ஆரம்பித்திருக்கிறது.