நயன்தாராவுக்கு அந்த விசயத்தில் போட்டி!! குழந்தை பெற்றப்பின் இப்படியொரு தொழிலை ஆரம்பித்த நடிகை காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் டாப் தமிழ் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் ஆகர்வால். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கமிட்டான படங்களில் நடித்து முடித்தப்பின் கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை பல ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.
அதன்பின் ஒரு மகனை ஈன்றெடுத்த காஜல் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மகன் வளர்ந்த புகைப்படங்களை பகிர்ந்த காஜல் நடிப்பை தாண்டி தற்போது புது ஒரு பிசினஸை ஆரம்பித்திருக்கிறார்.
பெரும்பாலும் நடிகைகள் அழகு சாதன பொருட்கள் சம்மந்தமான தொழிலை ஆரம்பித்து சைட் பிசினஸில் காசு சம்பாதித்து வருகிறார்கள். நடிகை நயன் தாராவும் லிப்பாம் தொழிலை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி சம்பாதித்து வருகிறார்.
அவருக்கு போட்டியாக தற்போது நடிகை காஜல் அகர்வாலும், கண்ணில் பூசப்படும் காஜல் அழகு சாதனத்தை வைத்து KajalByKajal என்ற பெயரில் தொழிலை துவங்கியிருக்கிறார். சிறப்பு விருந்தினராக காஜல் அகர்வாலின் கணவர் அதை ஆரம்பித்து வைத்துள்ளார்.