முன்னாள் கணவர் சாண்டியுடன் நெருக்கம்... இரண்டாம் மனைவியை சந்தித்த காஜல்
பிரபல தொலைக்காட்சி சேனலில் 2005ல் வெளியான சிந்துபாத் சீரியல் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. இதனைதொடர்ந்து கஸ்தூரி, அரசி, மானாடா மயிலாட நிகழ்ச்சி உள்ளிட்டவைகளில் நடித்து வந்தார்.
வெள்ளித்திரையில் வசூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம், இதயதிருடன், டிஸ்யூம், பெருமாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் மாயை, அதிதி, இரும்புத்திரை, கோ, பழைய வண்ணாரம்ப்பேட்டை, கலகலப்பு 2, ஆயிரத்தில் இருவர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
நடன இயக்குனர் சேண்டியுடன் காதல் ஏற்பட்டு 2008ல் திருமணம் செய்து கொண்ட காஜல் பசுபதி நான்கே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு காரணம் என்னுடைய காதல் டார்ச்சர் தான் சேண்டி பிரிந்தார் என்று அவரே கூறியிருந்தார்.
இதனை அடுத்து சாண்டி, சில்வியா என்பவரை 2017ல் திருமணம் செய்து சுசன்னா என்ற பெண் குழந்தையையும் பெற்றார்.
இந்நிலையில் காஜல் பா வருடங்கள் கழித்து சாண்டி வீட்டிற்கு சென்று சாண்டியுடனும் அவரது இரண்டாம் மனைவி, குழந்தை என செல்ஃபி எடுத்துள்ளார். அதன் புகைப்படங்களை இணையத்தில் நண்பேன்டா என்று கூறி பதிவினை வெளியிட்டுள்ளார்.

