கருப்பா இருக்க..ஹீரோயின் மெட்டீரியலே இல்லை!!அவமானத்தை சந்தித்த டாப் நடிகை..
பாலிவுட் நட்சத்திர நாயகி
சினிமாவை பொறுத்தவரை நட்சத்திர அந்தஸ்த்தை பெறுவது என்பது எளிதான விஷயம் கிடையாது. அதிலும் ஹீரோயின் ஆவதற்கு பல சவால்கள் மற்றும் அவமானங்களை சந்திக்க நேரும்.
திரைப்படத்துறையில் முன்னணி நாயகர்களுடன் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்த்தை பெற்ற பல நாயகிகள் தங்கள் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் கடுமையாக அவமானங்கள் உடல் தோற்ற இழிவுகள் என பல விஷயங்களை பார்த்திருப்பார்கள்.
அப்படியான அனுபவங்களை பாலிவுட் நட்சத்திர நாயகி எதிர்கொண்டு, வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தன் திறமையை நிரூபித்து 50 வயதிலும் டாப் நடிகையாக பாலிவுட் உள்ளிட்ட பல மொழிகளில் திகழ்ந்து வருகிறார்.
நடிகை கஜோல்
அந்த நடிகை தான் நடிகை கஜோல். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் தன்னை கேலி செய்ததாக கூறியிருக்கிறார். அதில், நீ கருப்பாக இருக்கிறாய், குண்டாக இருக்கிறாய், நாயகி மெட்டீரியல் இல்லையே என்று கேலி செய்தார்கள். அந்த வார்த்தையை கேட்டபோது மிகவும் வருத்தப்பட்டேன்.
ஒரு கட்டத்தில் என்னுடைய தன்னம்பிக்கையையும் இழந்தேன். எல்லோருடைய வார்த்தைகளையும் தாங்க முடியாமல் சற்று பின்வாங்கினாலும் தன்மீது கவனம் செலுத்தத் தொடங்கினேன். பின், தோற்றம், உடற்தகுதி மீது கவனம் செலுத்தத்தொடங்கியதால் கவர்ச்சியில் மாற்றம் வந்தது. இதனால் சிலர், கஜோல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று கூறினர்.
ஆனாலும் அவை முற்றிலும் வதந்திகள் என்று தெளிவுப்படுத்தினேன் என்று காஜல் தெரிவித்துள்ளார். கஜோலின் 17 வயதில் திரையுலகில் காலெடியெடுத்து வைத்து 1992 முதல் நடிக்க ஆரம்பித்து டாப் இடத்திற்கு வந்தார். நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து, இரு குழந்தைகளுக்கு தாய் ஆனார் கஜோல். தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டும் இருக்கிறார் கஜோல்.