நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அந்த மாதிரியான எண்ணம் தோணும்.. 49 வயதான கஜோல் வெளிப்படை
பிரபு தேவா, அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 1997 -ம் ஆண்டு வெளியான மின்சார கனவு என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் கஜோல்.
இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர், தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் வில்லி ஆக நடித்து அசத்தியிருந்தார்.
சமீபத்தில் கஜோல் நடித்து இருந்த The Trial என்ற வெப் தொடர் OTT தளத்தில் வெளியானது. அந்த தொடரில் கஜோல் இரண்டு பேருடன் லிப் லாக் அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கஜோல் நெருக்கமான காட்சியில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், " நம்மை ஒருவர் தொடும் போது, நடிகை என்கிற விஷயம் ஒரு அளவு தான் இருக்கும். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் மோசமாக இருக்கும், அருவருப்பாக தோன்றும்."
"அந்த மாதிரியான காட்சியில் நானும் நடித்து இருக்கிறேன். ஆனால் அது மோசமான அனுபவத்தை தான் கொடுத்தது. இது போன்ற அனுபவம் எனக்கு மீண்டும் வேண்டாம்" என்று கஜோல் கூறியுள்ளார்.