ஹீரோயின் ஆகிறாரா கஜோல் மகள் நைசா.. 21 வயதில் நடிகையின் மகள் எடுத்த முடிவு
பாலிவுட் திரையுலகில் பெரிய நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்களின் வாரிசுகள் சினிமா துறையில் கால்பதிப்பது என்பது வழக்கம் தான். அலியா பட், ரன்பிர் கபூர், கரீனா கபூர், சாரா அலி கான், ஜான்வி கபூர் என பல உதாரணங்களை கூறலாம்.
பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் கஜோல். இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு நைசா என்கிற மகளும், யுக் என்கிற மகனும் உள்ளனர்.
கஜோலின் மகள் நைசா சமீபகாலமாக கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் அவர் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து சமீபத்தில் கஜோலிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கஜோல், "என் மகள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டார். அவர் சினிமா துறையில் இணையமாட்டார்" என கூறியுள்ளார். 21 வயதில் மிகவும் கஜோலின் மகள் எடுத்துள்ள இந்த முடிவின் மூலம் அவர் சினிமாவிற்கு வரப்போவது இல்லை என உறுதியாகியுள்ளது.
