விருது விழாவிற்கு லேட்டா வந்த ஜெயலலிதா!! முகத்தில் அடித்த மாதிரி ரஜினி செய்த செயல்...
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தினை முடித்துவிட்டு கமல் ஹாசன் தயாரிப்பில் தன்னுடைய 173வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 75 வயதாகும் ரஜினிகாந்த் இப்போது ரொம்பவே பக்குவமாக பேசி வருகிறர. எதுவாக இருந்தாலும் வார்த்தைகளை யோசித்து பேசுகிறார்.

Once Upon A Time He Lived A Ghost என்ற ரீதியில் தான் அப்போது ரஜினிகாந்த் வாழ்ந்து வந்தார். ஏகபப்ட்ட பிரச்சனையும் சந்தித்திருக்கிறார். 80களில் உச்சத்தில் இருந்தபோது குடித்துவிட்டு ஏர்போர்ட்டில் இருக்கும் அதிகாரியிடம் தகராறு செய்ததாகவும் ஒரு பேச்சு இருக்கு. அதுமட்டுமின்றி தனக்ku கோபம் வந்துவிட்டால் கைகளைக்கூட ஓங்கிவிடுவார்.
அவருக்கும் ஜெயலலிதாவுக்கு ஏழாம் பொருத்தமாக இருந்தது. அவர் ஆட்சி செய்தபோது தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகியவிட்டது என்று ரஜினி சொன்னார். இதனால் அப்போதைய அமைச்சர் ஆர் எம் வீரப்பனின் பதவி பறிபோனது.

ஜெயலலிதா
அதேபோல் இன்னொரு மேடையில் இனியும் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று சொன்னார். சிவாஜிக்கு செவாலியே விருது கொடுக்க முடிவு செய்து அந்த நாட்டில் (பிரான்ஸ்)இருந்து இங்கே கொண்டு வந்தார்கள். சென்னையில் இருக்கும் ஒரு ஆடிட்டோரியத்தில்தான் விழாவை நடத்தினார்கள்.
அப்போது ஜெயலலிதாதான் முதலமைச்சர் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும் வந்தார்கள். கங்கை அமரன் ஒருபக்கம் இசை கச்சேரி நடத்த, நீண்ட நேரமாகியும் ஜெயலலிதா வரவில்லை. இதனால் ரஜினி, சிவாஜி உள்ளிட்டோர் எல்லாம் கடுப்பாகினர். ஒருவழியாக அந்த அம்மா வந்துவிட்டார். அவர் வந்தபோது அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்க, ரஜினியோ சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டார்.

அதுவே எல்லோருக்கும் பெரிய ஷாக், அதனை தொடர்ந்து பேசிய ரஜினி, ஜெயாவை பார்த்து, அவர் லேட்டாக வந்தடை குறிப்பிட்டு இங்கே பாருங்கள், இதெல்லாம் எனக்கு பிடிக்காது, என்று விரலை உயர்த்தினார். அனைவருமே உச்சக்கட்ட அதிர்ச்சியாகினர். ஜெயாவை பார்த்து எல்லோரும் தொடை நடுங்கிக்கொண்டிருந்த காலத்தில் இப்படி ரஜினி நடந்து கொண்டது தான் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.