'திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும்'.. பாலிவுட் ஷோவில் கஜோல் கூறிய கருத்து.. கடும் விவாதம்

Kajol Actress
By Kathick Nov 15, 2025 03:30 AM GMT
Report

பாலிவுட்டில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்'. இந்த நிகழ்ச்சியை நடிகைகள் கஜோல் மற்றும் ட்விங்கிள் கன்னா தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இதில் விருந்தினர்களாக கலந்துகொண்டு வரும் நிலையில், சமீபத்தில் விக்கி கௌஷல் மற்றும் க்ரித்தி சனோன் ஆகிய இருவரும் விருந்தினர்களாக வந்தனர்.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கூறிய கருத்து இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது. திருமணத்திற்கு காலாவதி மற்றும் புதுப்பித்தல் தேதி வேண்டும் என நடிகை கஜோல் கூறினார். "திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டுமா? என நடிகை ட்விங்கிள் கேட்டார். அதற்கு விக்கி, க்ரித்தி மற்றும் ட்விங்கிள் ஆகிய மூவரும் 'இல்லை' என கூறினார்கள்.

ஆனால், நடிகை கஜோல் 'ஆம்' என்றார். இது திருமணம் வாஷிங் மெஷின் இல்லை' என அதன்பின் நடிகை ட்விங்கிள் கூறினார்.

ஆனால், நடிகை கஜோல் தனது கருத்தை ஆதரித்து பேசினார், "சரியான நேரத்தில் நேரத்தில் சரியானவரை மணப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம்? புதுப்பித்தல் விருப்பம் இருந்தால் நல்லது. காலாவதி தேதி இருந்தால் யாரும் நீண்ட காலம் கஷ்டப்பட வேண்டாம்" என கூறினார்.