அடுத்தவங்க குடும்பத்தை கஷ்டப்படுத்தி வர காசு தேவையா? ராதிகாவை தொடர்ந்து பயில்வானை கேவலப்படுத்திய கலா மாஸ்டர்

Gossip Today Bayilvan Ranganathan
1 மாதம் முன்
Edward

Edward

இந்திய சினிமாவில் தற்போது வரை நடன கலையின் மாஸ்டராக திகழ்ந்து வருபவர் கலா மாஸ்டர். பல கலைஞர்களை நடன இயக்குனராக உருவாக்கிய பெருமை கலா மாஸ்டருக்கு உண்டு. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் பயில்வான் ரங்கநாதனின் அட்டூழியமான செயலை அசிங்கப்படுத்தி பேசியுள்ளார். சமீபத்தில் கூட மீனா கணவரின் இறப்பு சம்பந்தமான விசயங்களை பேசியது ஆதங்கப்படுத்தியது.

இதுகுறித்து கலா மாஸ்டர், நட்சத்திரங்கள் படங்களில் சரியாக நடிக்கவில்லை என்றால் அவர்களை பற்றி விமர்சிப்பது தவறில்லை. லேட்டாக வர்றாங்களா அதையும் விமர்சிக்கலாம். ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது தவறு என்று கூறியுள்ளார்.

மேலும், இப்படி அவர்களை விமர்சித்தால் அவரை மட்டும்மல்ல அவரது குடும்பத்தையும் பாதிக்கும் வேதனைப்படுத்தும் என்றும் கூறியுள்ளார். அப்படி பேசுவதால் என்னதான் கிடைக்கும். நான் யூடியூப் வீடியோக்களை இதற்காகதான் பார்க்கவிரும்பவில்லை.

அவர்களை பார்த்தால் கோபம் தான் வரும். ஒருவரை அவதூறாக பேசி அதில் போடும் வீடியோக்களால் வியூஸ் வருகிறதா. அப்படி ஒரு குடும்பத்தை கஷ்டப்படுத்தி பேசி வர காசை வெச்சு என்னதான் செய்யபோறீங்க? என்று கண்டபடி கேட்டுள்ளார் கலா மாஸ்டர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.