விஜய்யால் கதறி அழுத சுந்தர்.சி மகள்!! நடிகை குஷ்பூ சொன்ன உண்மை சம்பவம்...

Sundar C Vijay Kushboo
By Jai Aug 14, 2026 09:15 AM GMT
Report

குஷ்பூ

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகை குஷ்பூ. தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாருடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது குஷ்பூவுக்கு தமிழே தெரியாமல் இருந்தது. அப்போதெல்லாம் நாங்கள் செய்யாத கிண்டலே கிடையாது. இப்போது மைக் பிடித்து எந்தளவுக்கு பேசுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கும் என்று சுஜாதா தெரிவித்துள்ளார்.

விஜய்யால் கதறி அழுத சுந்தர்.சி மகள்!! நடிகை குஷ்பூ சொன்ன உண்மை சம்பவம்... | Khushbu Sundar Recalls Funny Incidents In Her Life

தொடர்ந்து பேசிய குஷ்பூ, எந்தளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது என்பதற்கு ஒரு சம்பவம் உள்ளது. அவந்திகா குழந்தையாக இருந்தபோது அவளை தூங்க வைத்துவிட்டு மேலே போர்த்தியிருந்த போர்வையை சரியாக சொருகிவிடுங்க என்று சொல்வதற்கு பதில் சொரிஞ்சு விடுங்க என்று சொல்லிவிட்டேன். அவரும் பாப்பாவை சொரிந்துவிட்டுக் கொண்டிருந்தார். நான் போர்வையை சொருகிவிடச் சொன்னேன், இதுகூட தெரியாதா என்று கூறினேன்.

சமையலறையில் எலி வந்ததை 'ஏலி' வந்தது என்று சொல்வேன். நான் ஒருமுரை சுந்தருக்கு கடிதம் எழுதினேன். எனக்கு முழுதாக தமிழ் எழுத தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் எழுதிவிட்டு கடைசியில் உங்கள் அன்புடன் பொண்டாட்டி எனூர் எழுதியும் அனுப்பிவிட்டேன். பொள்ளாச்சியிலிருந்து அவர் எனக்கு போன் பண்ணி வடை பஜ்ஜி எப்போது வருகிறது என்று கேட்டார்.

விஜய்யால் கதறி அழுத சுந்தர்.சி மகள்!! நடிகை குஷ்பூ சொன்ன உண்மை சம்பவம்... | Khushbu Sundar Recalls Funny Incidents In Her Life

நான் ஏன் சென்னையிலிருந்து வாணு, எனூர் கெட்க, நீதானே பொண்டாட்டியை 'போண்டா டீ' என்று எழுதி அனுப்பியிருக்க என சொல்லவும் எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது எனூர் குஷ்பூ பகிர்ந்துள்ளார்.

அனந்திகா

மேலும் குஷ்பூவிடம் சில புகைப்படங்களை காட்டியபோது, விஜய்யின் புகைப்படத்தை காட்டியுள்ளனர். அது குறித்து குஷ்பூ, இளைய மகள் அனந்திகா தீவிர விஜய் ரசிகை, சட்டமன்ற தேர்தலில் சுந்தரும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

விஜய்யால் கதறி அழுத சுந்தர்.சி மகள்!! நடிகை குஷ்பூ சொன்ன உண்மை சம்பவம்... | Khushbu Sundar Recalls Funny Incidents In Her Life

அப்போது அங்கு அனந்திகா அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுதாள். அப்பா தோற்றதை நினைத்து மகள் அழுகிறாள் என்று சுந்தரும் சமாதானப்படுத்தினார்.

ஆனால் தான் அதற்கு அழவில்லை, விஜய் தேர்தலில் ஜெயித்துவிட்டார், இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டாரே என்று அழுததாக தெரிவித்தபோது எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.