அரசியல் தலைவரிடம் பொது இடத்தில் பளார் வாங்கிய சிம்பு!! என்ன நடந்தது?
நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இதன்பின் அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசமி உள்ளிட்ட இயக்குநர்கள் இயக்கத்தில் அடுத்தடுத்து கமிட்டாகி வரும் சிம்பு, உடல் எடையை மெய்ண்ட்டைன் செய்வதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

தற்போது சிம்பு கொடுத்திருக்கும் பேட்டியொன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கலைஞர் கருணாநிதி
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதி பற்றி பேசுகையில், வல்லன் படத்தை இயக்கிய நேரத்தில் கலைஞர் தாத்தா எனக்கு படத்தைப் போட்டுக்காண்பிக்க வேண்டும் என்று சொன்னார்.
அவரை நான் தாத்தா என்றுதான் எப்போதும் அழைப்பேன். அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் நான் அவர் சொன்னதையே மறந்துவிட்டேன். இதன்பின் நாட்டிய அரங்கேற்ற விழா நடந்தது. அப்போது படமும் ரிலீஸாகிவிட்டது.

விழாவில் கலந்துகொள்ள நான் சென்றிருந்தபோது கலைஞரும் வந்திருந்தார். அவர் சொன்னது எனக்கு நியாபகத்திலேயே இல்லை.
அவரை பிடித்து நான் அழைத்து சென்றபோது, எனது கன்னத்திலேயே பளார் என்று ஒன்று அறைந்து, உன்னை படத்தை திரையிட சொன்னேனே? ஏன் செய்யவில்லை என்று கேட்டார். நான் உடனே சீக்கிரமே உங்களுக்கு திரையிட்டு காண்பிக்கிறேன் என்று சொல்லி சமாளித்துவிட்டேன் என்று சிம்பு தெரிவித்திருக்கிறார்.