தயாரிப்பாளர் மனைவியின் மரணம்!! மனைவி ஷாலினியுடன் நடுரோட்டில் நின்ற அஜித்..
அஜித் குமார்
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் பற்றி பல பிரபலங்கள் அவருடன் பழகிய அனுபவங்களை பகிர்வதுண்டு. அப்படி பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் 2001ல் என் மனைவி சிங்கப்பூர் சென்றபோது இறந்துவிட்டார். என் மனைவி இறந்த செய்தி கேட்டதும் அன்று இரவே அஜித் அவரது மனைவி ஷாலினியுடன் வீட்டிற்கு வந்துவிட்டார்.
கலைப்புலி தாணு
அவர் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டில் நாங்கள் இல்லை. காரணம் நாங்கள் சிங்கபூரில் இருந்து சென்னைக்கு வந்துக்கொண்டிருந்தோம்.
வீட்டிற்கு வந்த அஜித் நாங்கள் இல்லை என்பதை அறிந்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அவரது மனைவி ஷாலினியுடன் நடுரோட்டில் அவர்களது காரில் காத்திருந்தார்.
மற்ற நடிகர்கள் இப்படி காத்துக்கொண்டு இருப்பார்களா? என எனக்குத்தெரியாது, ஆனால் அஜித் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக்கொண்டிருந்தது என்னை நெகிழ்ச்சியடைச் செய்ததாக கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.