ஆதிரையை தொடர்ந்து வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் 9 போட்டியாளர்!! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களுடன் நடந்து வருகிறது. ஒப்பனை பொருட்கள் முதல் சமையல் பொருட்கள் என அனைத்தையும் பிக்பாஸ் எடுத்துக்கொண்டதால் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு போட்டிகள் வைத்து அதை வழங்கினார்.

இதில் முகவும் மோசமாக விளையாடிய திவாகர் மற்றும் கலையரசன் தேர்வு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் மோசமாக விளையாடி ஆதிரை எவிக்ட்-ஆகி பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கலையரசன்
தற்போது இந்த வார எவிக்ஷனில் குறைந்த வாக்குகள் பெற்று யார் வெளியேறினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த வாக்குகள் பெற்ற கலையரசன் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெள்யேறியிருக்கிறாராம்.
மேலும் 27 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த கலையரசனுக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டு, 27 நாட்களில் 4 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம். இந்த வாரம் வைல்ட் கார்ட் மூலம் பிரஜன் அவரது மனைவி சான்ரா, அமீர் ராகவ், திவ்ய கணேஷ் போன்றவர்கள் உள்ளே போகவுள்ளனர்.
