ரஜினி, விஜய், அஜித்-ஐ ஓரங்கட்டிய பிரபாஸின் கல்கி!! 5 நிமிஷத்துக்கு பில்டப் கொடுத்த கமல்...

Kamal Haasan Prabhas Amitabh Bachchan Kalki 2898 AD
By Edward Jun 28, 2024 04:28 AM GMT
Edward

Edward

Report

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் பல கோடி செலவில் உருவான படம் கல்கி 2898 AD. நேற்று ஜூன் 27 ஆம் தேதி உலகளவில் பல மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுபவதால் கல்கி படம் 1000 கோடி வசூலை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி, விஜய், அஜித்-ஐ ஓரங்கட்டிய பிரபாஸின் கல்கி!! 5 நிமிஷத்துக்கு பில்டப் கொடுத்த கமல்... | Kalki 2898 Ad First Day Box Office Kamal 5 Mins

இந்நிலையில், கல்கி 2898 AD படம் வெளியாகிய முதல் நாளில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ 175 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் கல்கி 2898 AD படம் 5.8 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வசூலால், தென்னிந்திய சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர்களான ரஜினி, விஜய், அஜித்தை பிரபாஸ் ஓரங்கட்டி இருக்கிறார்.

மேலும், படத்தின் பிரமோஷனுக்கு பல இடங்களுக்கு சென்று பில்டப் கொடுத்த கமல் ஹாசன், வில்லனாக வெறும் 5 நிமிட காட்சிகளில் மட்டுமே வருகிறாராம். அப்படி 5 நிமிடம் வந்தாலும் அவரின் பங்கு மிகப்பெரியளவில் இருப்பதாகவும் படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.