33 வயதான கல்யாணிக்கும் மோகன்லால் மகனுக்கு கல்யாணமா? முற்றுப்புள்ளி வைத்த தாயார்...
கல்யாணி பிரியதர்ஷன்
தெலுங்கில் 2017ல் வெளியான ஹெல்லோ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.

இதனையடுத்து மாநாடு படத்திலும் நடித்தார். பின் 3 ஆண்டுகளாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் லோகா படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை 300 கோடிக்கும் மேல் வசூலையும் குவித்தது. தற்போது ஜீனி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு பாடலில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் கல்யாணி குறித்து ஒரு செய்தி இணையத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முற்றுப்புள்ளி
33 வயதாகும் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கும், மோகன்லால் மகன் பிரண்வ்-க்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக வதந்திகள் கிளம்பியுள்ளது. காரணம், லிஸி போட்ட விஷு வாழ்த்து போஸ்ட் தானாம்.

விஷுவுக்கு வாழ்த்து தெரிவித்து லிஸி போஸ்ட் போட்ட நிலையில், சீக்கிரமே பிரணவ் - கல்யாணி திருமணம் தானே என ஒரு நபர் கமெண்ட் போட, ரசிகர்கள் பலரும் இருவருக்கும் திருமணமா? என்ற கேள்வியை கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
பிரியதர்ஷனின் மனைவியும் கல்யாணியின் அம்மாவுமான லிஸி லக்ஷமி, இது முழுக்க முழுக்க வதந்திதான். இருவரும் திருமணம் செய்யப் போவதில்லை என்று கூறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.