இரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் வாரிசு நடிகையாக 7ஆம் அறிவு, தனுஷின் 3 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னணி பாடகியாக இருந்தாலும் தன் மகள் நாயகியாக இருந்து என் பெயரை காப்பாற்ற வேண்டுமென நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பிரபலமானார்.
இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக களம் கண்டு வருகிறார். இதற்கிடையில் ஆஸ்திரேலியா நபரை காதலித்து அதன்பின் தோல்வியை கண்டார். அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்து வந்தார். ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு ஸ்ருதிஹாசன் டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞன் சாந்தனு என்பவரை சில நாட்களாக காதலித்து வருகிறார்.
இதைப் பற்றி அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதலியுடன் சென்னை திரும்பிய உள்ள நிலையில், அவர்கள் இருவரும் ஷாப்பிங் செய்யும் புகைப்படமானது சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவி வருகிறது.
ஏனென்றால் ஸ்ருதிஹாசனும் சாந்தனுவும் பொது இடத்தில் ரொமான்டிக் போஸ் கொடுக்கும் புகைப்படமும், அத்துடன் ஸ்ருதிஹாசனின் நெருங்கிய தோழியான டிசைனர் அமிர்தாவும் உடனிருக்கும் புகைப்படமும் தற்போது ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஸ்ருதிஹாசன் இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு அத்துடன் காதலனுடன் முதல் முதலாக நேற்று சென்னை வந்துள்ளேன் என்ற பதிவை போட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார்.