கதையில் தலையிட்டு டார்ச்சர் செய்த கமல்! ஓடிய இயக்குனரை சமாதானப்படுத்திய இளையராஜா..
உலக நாயகனாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய சாதனைகளையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
படம் வெளியாகி ஒரு மாதமான நிலையில் கிட்டத்தட்ட 500 கோடி அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தில் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் போது இது உங்கள் படம் என்று கூறி எந்த கருத்தினை கூறாமல் சுதந்திரமாக விட்டுள்ளார் கமல் ஹாசன்.
ஆனால் கமல் ஹாசனோ அல்லது முன்னணி நடிகர்களோ கதையில் சின்னசின்ன மாற்றத்தை கூறி இயக்குனரின் டிஸ்ட்டப் செய்வார்கள். அப்படி ஒரு சம்பவத்தை தேவர் மகன் படத்தில் கமல் ஹாசன் செய்துள்ளதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
மிகச்சிறந்த படமாக அமைந்த தேவர் மகன் படத்தினை இயக்க கமல் ஹாசன் தான் கேரள இயக்குனர் பரதனை கூப்பிட்டு வந்து இயக்க வைத்திருக்கிறார். அப்படி படப்பிடிப்பு நடக்கும் போது கமல் ஹாசன் பரதனிடம் கதையில் மாற்றத்தை கூறியுள்ளார்.
இதனால் கோபத்தில் கோச்சிக்கொண்டு கேரளாவிற்கே சென்று விட்டார். பின் இளையராஜா பரதனை சமாதானப்படுத்தி கூப்பிட்டு வந்துள்ளார். இதேபோல் தான் விக்ரம் படத்தில் கமல் நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
தேவர் மகன் இயக்கத்தில் தலையிட்ட கமல்... சமாதானப்படுத்திய இளையராஜா! | Bismi Interview
— IBC Tamil (@ibctamilmedia) June 14, 2022
W@tch Full Video >> https://t.co/M9YGBZZvQi#ThevarMagan #KamalHaasan #Ilaiyaraaja #Bharathan #Vikram #LokeshKanagaraj #BismiInterview #IBCTamil @jbismi14 @ikamalhaasan @ilaiyaraaja pic.twitter.com/xGSZtbQ8y6