ரம்யா கிருஷ்ணன், சிம்பு எல்லாம் கிடையாது எப்பவும் நான் தான்!! மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ்-ஆகிய கமல் ஹாசன்..

Kamal Haasan Silambarasan Ramya Krishnan Bigg Boss
By Edward Nov 25, 2022 04:15 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லேசான காய்ச்சலால் சில தினங்களுக்கு முன் கமல் ஹாசன் அவர்கள் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனையில் அறிக்கை வெளியிட்டது.

மேலும் ஓய்வு எடுக்கவும் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இப்படியிருக்கும் போது இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று கேள்விகள் எழுந்தும் சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் வரலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இன்று கமல் ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளராம். டிஸ்ஜார்ஜ் ஆன அடுத்த சில மணிநேரத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள டிஎஸ்பி படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் கமல் ஹாசன்.

அப்படியென்றால் நாளை நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராபர்ட் மாஸ்டரை எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றவும் இருக்கிறாராம்.