அந்த தொழில் செய்யும் பெண் வீட்டில் சாப்பிட்ட கமல் ஹாசன்! உண்மையில் என்ன நடந்தது?

kamalhaasan sukanya tamilcinema prostitute Mahanadhi
By Edward Feb 04, 2022 09:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உலக நாயகன் படங்கள் பல சொல்வதற்கு வார்த்தை அடங்காத அளவிற்கு பிரம்மிப்பாக அமையும். அப்படி  1994ல் நடிகர் கமல்ஹாசன், நடிகை சுகன்யா நடிப்பில் வெளியான100 நாட்களுக்கு மேலாக தியேட்டரில் ஓடிய படம் மகாநதி. காதல், டூயட், காமெடி, ஹீரோயிசன் என எதுவும் இல்லாமல் படம் எடுத்துள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

அப்படத்தின் காட்சிகள் கொல்கத்தாவின் ரெட்லைட் ஏரியா என்று அழைக்கும் சோனாகச்சி என்ற இடத்தில் ஷூட்டிங் நடந்தது. அப்போது விபச்சார பெண்கள் சூழ்ந்த வீடுகளுக்கு பக்கத்தில் தான் படப்பிடிப்பு குழுவும் இருந்தனர். அப்போது மீன் குழம்பு மணம் கமலை ஈர்க்க அங்கு சென்றுள்ளார்.

மணம் வீசிய வீடு ஒரு விபச்சார பெண்ணின் வீடுதான். அங்கு சென்று மீன் குழம்பு சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு அந்த விபச்சர பெண் எங்கள் வீட்டில் எல்லாம் நீங்கள் சாப்பிடுவீங்களா என்று கேட்க உடனே கமல் ஏன் சாப்பிடக்கூடாதா என்று கூறியுள்ளார்.

எனக்கும் கொஞ்சம் கொடுங்க என்று கூறி சாப்பிட்டது அந்த பெண்ணை பிரம்மிக்க வைத்துள்ளது. கமல் சாப்பிட்டு முடித்தப்பின்உடனே அந்த பெண் கமலின் காலில் விழுந்து நெற்றியில் குங்குமத்தை வைத்துள்ளார். என்ன ஆச்சு ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கமல் கேட்டுள்ளார்.

எல்லோரும் இரவில் தான் வருவார்கள் நீங்கதான் பகலில் வந்திருக்கீங்க என்று பதில் கொடுத்துள்ளார். இதை கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த காட்சியை கமல் மகாநதி படத்தில் தன் மகளை விபச்சார ஏரிவில் இருந்து கூப்பிடும் வரும் காட்சியில் மறைமுகமாக காட்சியமைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.